மதுரை: கொட்டும் மழையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

மதுரை: கொட்டும் மழையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

மதுரையில் கொட்டும் மழையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரையில் கொட்டும் மழையில் திமுக அரசைக் கண்டித்து, அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தும் அணையின் நீர்மட்டம் 138 அடியாக இருந்த போது, கடந்த 29 -ஆம் தேதி கேரளா அமைச்சர் ரோசி அகஸ்டின் முன்னிலையில் கேரளாவிற்கு இரண்டு மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை ஆளும் திமுக அரசாங்கம் விட்டுக் கொடுத்து விட்டதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

எனவே முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டவும், சரியாக கையாளவும் வேண்டி மதுரையில், திமுக அரசைக் கண்டித்து, கொட்டும் மழையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், முன்னாள் துணை மேயர் திரவியம், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாத்துரை உள்ளிட்டோர், தமிழக அரசைக் கண்டித்து கோஷமிட்டனர்.

Tags

Next Story
the future of work and ai