மதுரை; பள்ளிக்கு மறு கட்டமைப்புக்கு நிர்வாகிகள் தேர்வு

மதுரை; பள்ளிக்கு மறு கட்டமைப்புக்கு நிர்வாகிகள் தேர்வு
X

பள்ளிக்கு மறு கட்டமைப்புக்கு நிர்வாகிகள் தேர்வு

மதுரை அருகே பள்ளியில் மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பள்ளியில் மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு

மதுரை தல்லாகுளம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் தேர்ந்தெடுக்கும் கூட்டம், மாநகராட்சி 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் முருகன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் ரூபி முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழுவில், தலைவியாக ராணி, துணைத் தலைவராக ராமகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந் தெடுக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினராக அரிமா சங்கத் தலைவர் முத்துகிருஷ்ணன், ஆனந்த், சிவதாஸ் மற்றும் சாகர் தொலைக்காட்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் டுகாதி ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து, பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம், முக்கியத்துவம் மற்றும் அரசின் கல்வி உதவி திட்டங்கள் குறித்து, பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதில், உறுப்பினர்களாக 20 நபர்கள் தேர்வு செய்து, சான்றிதழ் வழங்கப்பட்டது.

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு