மதுரை அருகே கோயில் விழாவில் நடிகர் சூரி வழிபாடு

மதுரை அருகே கோயில் விழாவில் நடிகர் சூரி வழிபாடு
X

மதுரை அருகே ராஜாக்கூர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த திரைப்பட நடிகர் சூரி

மதுரை அருகே நடந்த கோயில் திருவிழா அன்னதானத்தில் நடிகர் சூரியுடன் அமைச்சர் மூர்த்தியும் பங்கேற்றார்

மதுரை அருகே கோயில் விழாவில் நடிகர் சூரி வழிபாடு நடத்தினார்

நடிகர் சூரியின் சொந்த கிராமம் கோயில் திருவிழாவில் நடிகர் விஜய் சேதுபதி அமைச்சர் மூர்த்தி பிரபலங்கள் பங்கேற்றனர். மதுரை அடுத்துள்ள இராஜாக்கூர் கிராமம் பிரபல நடிகர் சூரிக்கு சொந்தமான கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அருள்மிகு காளியம்மன் கோயில் ஆண்டுதோறும் ஆடி மாசம் திருவிழா நடப்பது வழக்கம். அதில் நடிகர் சூரி கலந்து கொண்டு வழிபடுவார்.

இந்த வருடம் ஆடி மாதத்தில் இக்கோயிலில் விமரிசையாக நடைபெற்ற கோயில் திருவிழாவில் பிரபல முன்னணி திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, நடிகர் சூரி வீட்டுக்கு சென்றார். முன்னதாக , பொதுமக்களுக்கு அவர் கைகுலுக்கி கையில் முத்தமிட்டார். நடிகர் சூரி வீட்டிற்கு முன்பு பொதுமக்கள் ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். இதையொட்டி அன்னதான விழாவில் வணிகவரி துறை மற்றும் பத்திர துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு நடிகர் சூரி யுடன் சேர்ந்து உணவு அருந்தினார். இதில், திமுக முக்கியமான நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நா.த.க. வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு