ஆடி அமாவாசை: அழகர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
மதுரை அழகர் கோவில் நூபுர கங்கையில், நீராடும் பக்தர்கள்:
அழகர் கோவில் மலை மேல் உள்ள நூபுரகங்கையில் பக்தர்கள் ஆடி அமாவாசை ஒட்டி புனித நீராடினார்கள்
மதுரை அருகே உள்ளது அழகர் கோவில் ஆகும் இதன் மலை மேல் உள்ள நுகருகங்கைபுனித நீரில் ஆடி அமாவாசையை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் புனித நீராடினார்கள். மேலும் தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் புனித நீரை எடுத்துக்கொண்டு அங்குள்ள ராக்காயி அம்மனை வழிபட்டபின்னர் ஆறாவது படை வீடு என சோலைமலை முருகன் கோவிலில் உள்ள சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையை வணங்கினர். தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் என்ற சுந்தர் ராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூமாதேவி மற்றும் கல்யாண சுந்தரவல்லி தாயார் சக்கரத்தாழ்வார் ஆண்டாள், காவல் தெய்வமாக விளங்கும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமியை வழிபட்டு பிரசாதம் பெற்று சென்றனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமசாமி மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu