மதுரை அருகே கால்வாயில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மதுரை அருகே கால்வாயில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

நீரில் மூழ்கியவரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

மதுரை அருகே கால்வாயில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் கள்ளந்திரி கால்வாயில் குடும்பத்துடன் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலியானார்.

மதுரை மாவட்டம், கள்ளந்திரி பகுதியில் உள்ள முல்லைப் பெரியார் கால்வாயில் மதுரை ஜீவா நகர் 2வது தெருவை சேர்ந்த விக்கி(வயது 35). என்பவர் கார்பெண்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்று விக்கி தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளோடு கள்ளந்திரி கால்வாயில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

அங்கு குடும்பத்துடன் நீண்ட நேரம் குளித்து விட்டு, பின்னர் மனைவி மற்றும் தன் இரண்டு குழந்தைகளை கால்வாயின் கரைக்கு ஏறும்படி அறிவுறுத்திய பின்னர், விக்கி நீண்ட நேரம் குளித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென நீருக்குள் மூழ்கி மறைந்துள்ளார்.இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் விக்கியை தேடினர். ஆனால் பல மணிநேரம் தேடியும் உடல் கிடைக்கவில்லை.


இதனை தொடர்ந்து, மதுரை தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இன்று காலை விக்கியின் உடலை கைப்பற்றிய தீயணைப்பு துறை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்துடன் குளிக்க சென்ற இடத்தில் மனைவி மற்றும் குழந்தைகள் கண் எதிரே விக்கி தண்ணீரில் மூழ்கி இறந்தது அவரது குடும்பத்தினர் மட்டும் இன்றி அந்த பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story