மதுரையில் பல வழக்குகளில் தொடர்புடைய நபரை காலில் சுட்டு பிடித்த போலீஸார்
![மதுரையில் பல வழக்குகளில் தொடர்புடைய நபரை காலில் சுட்டு பிடித்த போலீஸார் மதுரையில் பல வழக்குகளில் தொடர்புடைய நபரை காலில் சுட்டு பிடித்த போலீஸார்](https://www.nativenews.in/h-upload/2023/02/28/1669436-img-20230228-wa0003.webp)
மதுரையில் போலீஸாரால், காலில் சுட்டு பிடிக்கப்பட்ட விநோத்.
மதுரையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரௌடி மீது காலில் துப்பாக்கி சூடு - காயமடைந்த காவலர் மற்றும் துப்பாக்கி சூட்டிற்கு ஆளான குற்றவாளி வினோத் அரசு மருத்துவமனையில் அனுமதிபட்டுள்ளனர்.
மதுரை வளர்நகர் அருகே ராஜிவ்காந்தி நகர் பகுதியில் கடந்த 22ஆம் தேதி உலகனேரியை சேர்ந்த பாலமுருகன் என்ற டோராபாலா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இந்த வழக்கினை, மதுரை மாட்டுத்தாவணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.இந்த கொலை வழக்கு தொடர்பாக, வினோத், மாரி, விஜயராகவன், சூர்யா, ஜெகதீஸ்வரன் 5 பேரை கைது செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.
இதில் முதல் குற்றவாளியாக பல்வேறு குற்றசம்பவங்களில் தொடர்புடைய பிரபல ரௌடியான உலகனேரியை சேர்ந்த வினோத் என்பவர் கைது செய்து, கொலை சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் பதுங்கியிருந்த பகுதி குறித்து அடையாளம் காட்டுவதற்காக அழைத்து சென்றுள்ளனர்.
மதுரை வண்டியூர் பகுதிக்கு வினோத்தை காவல்துறையினர் அழைத்துசென்று அடையாளம் காட்டியபோது, திடீரென அங்கு பதுக்கிவைத்திருந்த அரிவாளால் முதல்நிலை காவலர் சரவணகுமாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த ஆய்வாளர் ராஜாங்கம் ரவுடி வினோத்தின் வலது காலில் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தார். இதனையடுத்து, காயமடைந்த ரவுடி வினோத்தை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினரை வெட்ட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu