மதுரையில் பிரபல ஜவுளி நிறுவனத்தில் தீ விபத்து
மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தில் நேரிட்ட தீ விபத்து
மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ளது சூப்பர் சரவணா ஸ்டோர். இந்த நிறுவனத்தில், இன்று பிற்பகலில் திடீரென தீப்பற்றியது. இக்கட்டிடத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டதால் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. போலீசார் தரப்பில், நிறுவனத்தின் உள்ளே இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் தெரிவித்தனர் .
தீ கொழுந்து விட்டு எரிந்ததால், பொது மக்களை அவ்வழியாக செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. பல்வேறு இடங்களிலிருந்து இருந்து, பல்வேறு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்க தொடங்கின.இந்த தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதமாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால், ஒத்தக்கடை மேலூர் ஆகிய வழியில் செல்கின்ற வாகனங்கள் மெதுவாக சென்றன. தகவல் கிடைத்ததும், போலீசார்விரைந்து வந்து போக்குவரத்து சீர் செய்தனர்.
தீயை அணைத்து முடித்தவுடன் தான், சேத மதிப்பு இனிமேல்தான் தெரிய வரும்.இந்த நிறுவனத்தின் பல மாடி கட்டிடங்கள் உள்ளது. ஒன்பதாவது மாடியில் உணவுக் கூடமும், ஏழு மாடிகளில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பொருள்கள் உள்ளன.இந்த கடையில் தினசரி வாடிக்கையாளர்கள் கூட்டம், திருவிழா கூட்டம் போல காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu