24 மணி நேரமும் இயங்கும் மின்னகம் சேவை மையத்தை மக்கள் பயன்படுத்தலாம்

24 மணி நேரமும் இயங்கும் மின்னகம் சேவை மையத்தை  மக்கள் பயன்படுத்தலாம்
X

பைல்படம்

பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமான புகார்- உதவிக்கு மின்னகம் -மின் நுகர்வோர் சேவை எண்ணை (9498794987) தொடர்பு கொள்ளலாம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக பொதுமக்கள் மற்றும் நுகர்வோரிடமிருந்து பெறப்படும் புகார்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் மையமாக 24 மணி நேரமும் செயல்படும் , மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை மையத்தை தமிழக முதலமைச்சர் 20.06.2021 அன்று சென்னையில் தொடக்கி வைத்தார்.

மின் நுகர்வோர் சேவை மையம் அலைபேசி எண்.9498794987 -ல் பெறப்படும் புகார்களை சென்னை - மின்னகம் தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட மின் பகிர்மான வட்டங்களுக்கு கணினி மூலம் அனுப்பப்படுகிறது.

இவ்வாறு, அனுப்பப்படும் புகார்களை மின் பகிர்மான வட்ட அளவில் 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்திலிருந்து சம்பந்தப்பட்ட உதவி பொறியாளருக்கும் மற்றும் பல்வேறு உயரதிகாரிகள் கொண்ட வாட்ஸ்அப் குரூப்பிற்கும் அனுப்பப்படுகிறது. பெறப்பட்ட புகார்கள் எந்த வகையானது என கள ஆய்வு செய்து உடனுக்குடன் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெறப்பட்ட புகார்களுக்கு தீர்வு கண்டவுடன் சம்பந்தப்பட்ட பிரிவு பொறியாளர், வட்ட அளவில் செயல்படும் மின்னகத்திற்கு வாட்ஸ்அப் (கட்செயலி) வாயிலாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி விளக்கமாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட நுகர்வோரிடமே வட்ட அளவில் செயல்படும் மின்னகம் மூலமாக உறுதிபடுத்தப்பட்டவுடன், புகார்கள் முடித்து வைக்கப்படுகின்றன. மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் மீது, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பு அலுவலர்களாலும் கண்காணிக்கப்படுகிறது.எனவே, பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமான புகார்களுக்கும் உதவிக்கும் மின்னகம் -மின் நுகர்வோர் சேவை எண்ணை (9498794987) தொடர்பு கொண்டு பயனடையலாம்.

மேலும், பொதுமக்கள் தங்களுடைய மின் இணைப்பு தொடர்பான சரியான தொலைபேசி எண்ணை சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தில் சரிபார்த்து தேவையெனில், புதுப்பித்துக் கொள்ளவும். அதனால், தங்களுடைய பகுதிகளில் ஏற்படும் மாதாந்திர மின் பராமரிப்பு மற்றும் மின் தொடர் செயலிழப்பு உத்தேசிக்கப்பட்ட மின்தடை மின்நுகர்வோர் கட்டணம் சம்பந்தமான தகவல்களையும் மதுரை மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ளலாம் என மதுரை மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்

Tags

Next Story
ai solutions for small business