மதுரையில் பக்தர்கள் இன்றி நவ.9-ல் சூரசம்ஹார விழா:கோயில் நிர்வாகம் அறிவிப்பு

மதுரையில் பக்தர்கள் இன்றி  நவ.9-ல் சூரசம்ஹார விழா:கோயில் நிர்வாகம் அறிவிப்பு
X

பைல் படம்

அழகர்கோயிலில், சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் முடிந்த பிறகே, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்

மதுரை அழகர்கோயிலில் பக்தர்கள் இன்றி கந்த சஷ்டி விழா நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அழகர் கோயில் மலைமேல் அமைந்துள்ள பழமுதிர் சோலை முருகன் கோயிலில், நவ. 9-ம் தேதி செவ்வாய்கிழமை பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும் என துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் தி. அனிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: மதுரை அழகர்கோயில் மலைமேல் உள்ள முருகன் கோயிலில், கந்த சஷ்டி விழாவானது, நவ. 4-ம் தேதி வியாழக்கிழமை தொடங்கி, நவ. 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கோயிலில், சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் முடிந்த பிறகே, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். கொரோனா நடைமுறை அமலில் உள்ளதால், பக்தர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

இதேபோல், மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழா, நவ. 4.-ஆம் தேதி தொடங்கி, நவ. 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என கோயில் துணை ஆணையாளர் மு. ராமசாமி தெரிவித்தார்.

Tags

Next Story
ai healthcare products