கோவிலின் ஆடி வீதிகளில் மீனாட்சி சொக்கநாதர் பிரியாவிடை வீதி உலா.

கோவிலின் ஆடி வீதிகளில் மீனாட்சி சொக்கநாதர் பிரியாவிடை வீதி உலா.
X
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தேரோட்டம் தடை செய்யப்பட்டதால், கோவிலின் ஆடி வீதிகளில் மீனாட்சி சொக்கநாதர் பிரியாவிடை உலா

துரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்றது. சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடைபெற்றது.

திருக்கல்யாணத்திற்கு மறுநாள் திருத்தேர் வீதி உலா நடைபெறுவது வழக்கம். கொரோனா காரணமாக மாசி வீதிகளில் சுவாமி வீதியுலா வருவது தடை செய்யப்பட்டுள்ளதால், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் தேர்த்திருவிழாவை கோவிலுக்குள் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்து, சட்டத்தேரில் இன்று காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆடி வீதிகளில் வலம் வந்தனர். இதற்காக புதிதாக சட்ட தேர் செய்யப்பட்டது.

தேரில் மீனாட்சி தனித்தேரிலும், சொக்கநாதர் பிரியாவிடை தனித்தேரிலும் ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.

இதில் கோவில் ஊழியர்கள், சிவாச்சாரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நாளை தீர்த்தவாரியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!