பளுதூக்கும் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற மாணவிகளுக்கு வரவேற்பு
சர்வதேச அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்ற மாணவிகளுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இந்தோ-நேபாள் சர்வதேச அளவிலான போட்டி கடந்த செப்., 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையில் நடைபெற்ற பளுத்தூக்கும் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த 7 பள்ளி மாணவிகள் பங்கெடுத்து, தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளனர். இதில், 14 வயதுக்குட்பட்டோர் 59 கிலோ எடை பிரிவில் ஐஷ்வர்யா தங்கப்பதக்கமும், 17 வயது 81கிலோ எடை பிரிவில் பூஐா தங்கப்பதக்கம், 16 வயது 51 கிலோ எடை பிரிவில் லோஹிதா வெள்ளி பதக்கம் பெற்றுள்ளனர். அதேபோல், கலாஸ்ரீ 17 வயது 81 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம். 19 வயது உட்பட பிரிவில் ஹரிணி தங்கப்பதக்கம், சிவசத்தியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.
தொடர்ந்து, ஸ்ரீ சாரதா வித்யாவனம் பள்ளியின், உடற்பயிற்சி ஆசிரியர் பி. காஞ்சனா, பயிற்றுனர்களுக்கான போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் பங்கு பெற்று பதக்கங்களை வென்று மாணவிகளுக்கு மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில், பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர், தொடர்ந்து அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்தினர்.
இது குறித்து, பதக்கம் வென்ற மாணவிகள் கூறுகையில், தொடர்ந்து சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி . தொடர்ந்து, நாட்டிற்காக ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கெடுத்து பதக்கங்களை வெல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப் போவதாக நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu