மதுரையில் வாலிபர் வெட்டிக்கொலை; ஒருவர் கைது, மற்றொருவர் தப்பியோட்டம்

மதுரையில் வாலிபர் வெட்டிக்கொலை; ஒருவர் கைது, மற்றொருவர் தப்பியோட்டம்
X

பைல் படம்

மதுரையில் வாலிபர் ஒருவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் எல்லைக்குட்பட்ட எல்லிஸ் நகர் காந்திஜி காலனியை சேர்ந்த பிரபு வயது 26. காந்திஜி காலனி பகுதியில் நேற்று இரவு பின்தொடர்ந்த இருவர் பிரபுவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு நெஞ்சு, கை, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் நிலைக்குலைந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த, மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், குரு மற்றும் ரிஸ்வான் அலி இருவரும் சேர்ந்து பிரபுவை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ரிஸ்வான் அலியை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய குருவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!