கொலை வழக்கில் ஆஜராகத சார்பு ஆய்வாளருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

கொலை வழக்கில் ஆஜராகத சார்பு ஆய்வாளருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்
X
நீதிமன்றத்தில் ஆஜராகத சார்பு ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்.

மதுரை மாவட்டம் சிலைமான் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் நாகூர்அனிபா என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு தனது மனைவியை கொலை செய்தார்.

இந்த சம்பவம் குறித்து சிலைமான் காவல்நிலைய சார்பு ஆய்வாளராக பணியிலிருந்த சரவணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இந்த கொலை வழக்கு மதுரை மாவட்ட 4-வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே சார்பு ஆய்வாளர் சரவணன், நத்தம் காவல்நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இன்று நாகூர்அனிபா சம்பந்தப்பட்ட கொலை வழக்கு விசாரணையின் போது சார்பு ஆய்வாளர் சரவணன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, இதேபோன்று கடந்த சில மாதங்களாகவே இந்த தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

இதனால் மதுரை மாவட்ட காவல்துறையினர் சார்பு ஆய்வாளர் சரவணனை வரும் 9ஆம் தேதி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி நாகலட்சுமி உத்தரவிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!