மதுரைக்கு வந்த ஆறாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்

மதுரைக்கு வந்த ஆறாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்
X
மதுரை கூடல்நகருக்கு ஆறாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் வந்துள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான 6- வது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் மதுரை வந்தது - இதனுடன் மொத்தமாக தமிழகத்திற்கு ரயில் மூலம் 3404.85 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் வந்துள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது:

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 6 டேங்கர் லாரிகளில் 89.2 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இது தமிழகத்திற்கு, வந்த 50 ஆவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும்.

மேலும், இது மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்திற்கு வந்த 4 ஆவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும்.

ஏற்கனவே, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, தூத்துக்குடி மீளவிட்டான், ஆகிய ரயில் நிலையங்களுக்கு தலா ஒரு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. ரோல் ஆன் - ரோல் ஆப் கான்ஸ்ப்ட், திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட டேங்கர் லாரிகள் கூடல் நகர் ரயில் நிலையம் வந்தவுடன் சாலை மார்க்கமாக இயங்கி ஆக்சிசன் தேவைப்பட்ட மருத்துவமனைகளுக்கு விரைவாக அனுப்பி வைக்கப்பட்டது.

இதனுடன், இதுவரை தமிழகத்திற்கு ரயில் மூலம் 3404.85 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களுக்கு ரயில் மூலம் இதுவரை, 435.19 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிசன் வந்துள்ளது என, ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!