கூரியர் மூலம் குட்கா, பான்மசாலா கடத்தல்; மதுரையில் 3 பேர் கைது

கூரியர் மூலம் குட்கா, பான்மசாலா கடத்தல்; மதுரையில் 3 பேர் கைது
X

கொரியர் மூலம் குட்கா, பான்மசாலா கடத்தியதாக கைது செய்யப்பட்ட மூவர்.

மதுரையில் கூரியரில் குட்கா, பான்மசாலா கடத்தியதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரையில் தனியார் கூரியர் சேவை மூலமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், பான்பராக், குட்கா உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்ததாக மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின்பேரில் விசாரணை நடத்திய எஸ்.எஸ்.காலனி போலீசார், கூரியரில் வந்த முகவரியை ஆய்வு செய்ததில் நெல்லை மாவட்டதிலிருந்து கொரியர் மூலம் கடத்துவது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, நெல்லை சென்ற காவல்துறை கூடங்குளத்தை சேர்ந்த கண்ணன், திசையன்விளையை சேர்ந்த பாண்டியராஜன், வாழகுரு ஆகிய 3 பேரை கைது செய்தனர். மதுரையை சேர்ந்த தலைமறைவான ரோஷனை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும், அவர்களது வாகனங்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 940 கிலோ பான்பராக், குட்கா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுபோன்று கூரியர் மூலம் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தும் சம்பவத்தில் கும்பலாக செயல்படுகிறார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!