மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
X

மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசின் மக்கள் விரோதச்செயல், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மத்திய அரசைக் கண்டித்து, திமுக, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மத்திய அரசைக் கண்டித்து, திமுக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம். சோழவந்தான், தென்கரை, திருவேடகம் உள்ளிட்ட பகுதிகளிலும், மதுரை நகரில் பல இடங்களிலிலும், மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் விலையை குறைக்கக் கோரி முழக்கமிட்டனர்.

திருவேடகத்தில், முன்னாள் ஊராட்சித் தலைவர் பெரியகருப்பன் தலைமையில், சுப்பையா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல், மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக மத்திய அரசைக் கண்டித்து பொறுப்புக் குழு உறுப்பினர் மா.ஜெயராம், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் சிம்மக்கல் செ.போசு,மாவட்ட துணைச் செயலாளர் ரீகல் சண்முகம், வட்ட செயலாளர்கள் சு.ப.கண்ணன், செந்தில் மற்றும் 79- ஆவது வட்ட நிர்வாகி செந்தில் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
உங்கள் திறன்களுக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குங்கள் – AI உதவியுடன்!