மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய பி.ஆர்.ஒ., பொறுப்பேற்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய பி.ஆர்.ஒ., பொறுப்பேற்பு
X

மதுரை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக பொறுப்பேற்ற சாலி தளபதி.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், புதியதாக நியமிக்கப்பட்ட மக்கள் தொடர்பு அலுவலர் இன்று பதவியேற்றார்.

மதுரை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக சாலி தளபதி இன்று பிற்பகல் பொறுப்பேற்றார். திண்டுக்கல் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய இவரை மதுரைக்கு மாறுதல் செய்யப்பட்டது.

இவர், ஏற்கெனவே, மதுரை மாவட்ட மக்கள் தொடர்பு உதவி அலுவலர் மற்றும் சிவகங்கை, விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும் பணியாற்றியுள்ளார்.

இவருக்கு, மதுரை மாவட்ட மக்கள் தொடர்பு உதவி அலுவலர் விநோத் மற்றும் அலுவலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!