மதுரை நகர குற்றச் செய்திகள்...

மதுரை நகர குற்றச் செய்திகள்...
X
மதுரை நகர குற்றச் செய்திகள்..

கணவர் விஷம் குடித்து தற்கொலை : மனைவி போலீசில் புகார்

மதுரை தெப்பக்குளத்தில் குடும்பப்பிரச்னையில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக மனைவி கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை காமராஜபுரம் பள்ளிவாசல் அருகே வசித்து வந்தவர் முருகன்42.இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கும், மனைவிக்கும் இடையே குடும்பப்பிரச்னை காரணமாக அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதனால், மனமுடைந்த முருகன் நேற்று அவரது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில்‌, அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, மனைவி மாரிச்செல்வி கொடுத்த புகாரில், தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

....................................................................

சைக்கிளில் சென்ற வாட்ச்மேன் வலிப்பு நோயால் தவறி விழுந்து பலி

மதுரை திருநகரில் சைக்கிளில் சென்ற வாட்ச்மேன் வலிப்பு நோய் வந்து பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அருகே தனக்கன்குளத்தை சேர்ந்தவர் ராஜு 60. இவர் தனியார் நிறுவனத்தில் வாட்ச் மேனாக வேலை பார்த்து வந்தார். இவர், திருநகரில் சைக்கிளில் சென்ற போது, அவருக்கு திடீரென்று வலிப்பு நோய் வந்தது. இதனால், சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல், ராஜு பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து, திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!