பாரம்பரியமிக்க தமிழ் பெயர்களை மறைக்க ரயில்வே நிர்வாகம் முயற்சியா?
ரயில்வே டிக்கெட்டுகளில் இந்தியும், ஆங்கிலம் மடடும் உள்ளதால் பயணிகள் அதிருப்தி.
தமிழகத்தில் ஓடக்கூடிய ரயில்கள் அனைத்திலும் பாரம்பரிய, சேரன், சோழன், பாண்டியன் மற்றும் முத்து நகர், நெல்லை போன்ற தமிழ் பெயர்கள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அப்போது, நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு பின்னர், சிறப்பு ரயில் என்று அறிவிக்கப்பட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. இது நாள் வரையில், அந்த ரயில்களின் பெயர் மாற்றப்படவில்லை. இந்த நிலையில், இன்று மதுரையில், பயணி ஒருவர் முன்பதிவு படிவத்தில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் என்று எழுதி கணினி முன்பதிவு அலுவலகம் முன், பதிவு செய்வதற்காக படிவத்தைக் கொடுத்து உள்ளார்.
அப்போது, முன்பதிவு செய்யும் அதிகாரி, பாண்டியன் எக்ஸ்பிரஸ் என்கின்ற ரயில் இப்பொழுது இயக்கப்படவில்லை, எண்ணை எழுதிக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அப்பொழுது, என்ன செய்வது என்று தெரியாமல் இணையத்தில் சென்று புறப்படும் நேரத்தை கணக்கிட்டு, வண்டி என்னை அதில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் என்னும் தமிழ் பாரம்பரியம் மிக்க பெயரை அளித்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என பயணி வேதனையுடன் தெரிவித்தார்.
சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், தமிழ் பாரம்பரிய மிக்க பெயர்களை இப்பொழுது வருங்கால சந்ததிகள் மறந்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்களுக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் என்று அதற்கு மத்திய அரசு ரயில்வே நிர்வாகம் அம்மாநில பாரம்பரிய பெயர்களை வைத்து ரயில்களை இயக்குகிறது. ஆனால், தமிழகத்தில் தமிழை அழிக்க முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இதுபோன்று, முன்பதிவு டிக்கெட்டில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் செல்லும் ஊர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் தமிழில் ஒரு வார்த்தை கூட இல்லாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. தொடர்ந்து, தமிழை மற்றும் அதன் பாரம்பரியத்தை அழிக்கும் முயற்சியில் வருங்கால சந்ததியினர் தெரிந்து விடக்கூடாது என்ற நோக்கத்திலேயே செயல்படுவதாகவும், இதுபோன்று தொடர்ந்து செயல்பட்டால் மிகப் பெரிய போராட்டங்கள் வெடிக்கும் என சமூக ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்களும் எச்சரிக்கை விடுக்கின்றனர். உடனடியாக, தமிழகத்தில் இயங்கும் அனைத்து ரயில்களும் ஏற்கனவே இயக்கப்பட்ட தமிழ் பெயர்களை வைத்தே ரயில்கள் இயக்கப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu