தமிழக சிறைகளில் கூடுதல் மருத்துவ வசதிகள்: அமைச்சர் ரகுபதி

தமிழக சிறைகளில் கூடுதல் மருத்துவ வசதிகள்: அமைச்சர் ரகுபதி
X
மதுரை மத்திய சிறையில் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி திடீர் ஆய்வு.

தமிழக சிறைகளில் கூடுதலாக மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படும் என, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். மதுரை அரசடி மத்திய சிறைச்சாலையை அவர் திங்கள்கிழமை ஆய்வு செய்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சில அடிப்படை வசதிகள் செய்து தரும்படி கேட்டு உள்ளனர்.

அதிமுக ஆட்சியில் கைதிகளின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. முதலமைச்சர் கைதிகளின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறார். சிறையில் கூடுதலாக மருத்துவ வசதிகளை அதிகரிக்க உள்ளோம். விடுதலை கோரும் கைதிகளை விடுவிக்க பரிசீலனை செய்யப்படும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மதுரை சிறையில் உள்ள ரவிசந்திரன் பரோல் கேட்டு உள்ளார். நேரடியாக பரோல் கேட்க முடியாது என்பதால், ரவிசந்திரன் தாயார் வழியாக பரோல் கேட்க அறிவுறுத்தி உள்ளேன்.

ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பாக ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளார். ஆளுநருக்கு அதிகாரம் இருந்தும் ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்கவில்லை. ஏழு தமிழர் விடுதலையில் சட்ட சிக்கலை உருவாக்க முயற்சி நடக்கிறது. முதலமைச்சர் இதில் எந்த சிக்கலிலும் சிக்கிக் கொள்ள மாட்டார், என தெரிவித்துள்ளார்.

நீட் ஆய்வுக்குழு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்ற தெரிவித்த கருத்துக்கு குறித்து கேட்ட போது, 'ஆய்வு குழு மக்களின் கருத்துக்களை பெறவே நியமிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்றங்களுக்கு எதிராக அந்த குழு உருவாக்கப்படவில்லை. சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டே நியமிக்கப்பட்டு உள்ளது,' என கூறினார். ஆய்வின்போது, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், பூமிநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!