மதுரை காப்பகத்தில் குழந்தைகள் விற்ற வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

மதுரை காப்பகத்தில் குழந்தைகள் விற்ற வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
X

கைது செய்யப்பட்டுள்ள அறக்கட்டளை நிறுவனர் சிவகுமார்.

மதுரை குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் விற்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கைது.

மதுரை:

மதுரையில் இதயம் அறக்கட்டளையின் கீழ் நடத்தப்பட்ட ஆதரவற்றோர் மையத்திலிருந்து இரு குழந்தைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரத்தில் தலைமறைவாகியிருந்த அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமார் மற்றும் உதவியாளர் மாதர்ஷா ஆகிய இருவரையும் தனிப்படை காவல்துறையினர் போடி அருகே கைது செய்துள்ளனர்.

கடந்த 29ஆம் தேதி தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது போடி மெட்டு அருகே இரு வரையும் போலீசார் கைது செய்து மதுரை அழைத்து வருகின்றனர். கொரோனாவால் ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்து விட்டதாக நாடகமாடி குழந்தையை 2 லட்சத்திற்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சிவக்குமார் மற்றும் மாதர்ஷா வழக்கின் முக்கிய குற்றவாளிகளாவர். இருவரையும் போலீசார் தேனி மாவட்டம் போடி மெட்டு அருகே கைது செய்து மதுரைக்கு அழைத்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!