மதுரையில் பலத்த மழை: அடுக்குமாடி வீட்டின் படிகள் இடிந்து விழுந்தன

மதுரையில் பலத்த மழை: அடுக்குமாடி வீட்டின் படிகள் இடிந்து விழுந்தன
X

மதுரை எஸ். எஸ். காலனி காவல் எல்லைக்குட்பட்ட எல்லிஸ் நகரில் படிக்கட்டுகள் சேதமடைந்த அடுக்குமாடி குடியிருப்பு.

அடுக்குமாடி குடியிருப்பில் மாடி படிகள் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

மதுரையில் மழையால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் பழைய படிக்கட்டுகள் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய குடியிருப்புவாசிகள், மதுரை எஸ். எஸ். காலனி காவல் எல்லைக்குட்பட்ட எல்லிஸ் நகர் 2-வது பால் டிப்போ ஹவுசிங் போர்டு காலனி ஷோபனா என்னும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், ஆறு குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்த நிலையில், பெய்த கனமழை காரணமாக, இரண்டாவது மாடியில் படிக்கட்டுகள், திடீரென இடிந்து விழுந்தது. சுதாரித்துக்கொண்ட குடியிருப்புவாசிகள், உடனே வீட்டை விட்டு வெளியேறினர். சம்பவம் குறித்து, தகவல் அறிந்த மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிப்புகள் ஏதும் உள்ளதா இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளார்களா என சோதனை செய்தனர்.

உள்ளே யாரும் இல்லை என உறுதி செய்தபின், உடனடியாக எஸ் எஸ் காலனி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்ததுடன், வீட்டுக்குள் யாரும் செல்லாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டது. வீட்டில் உள்ளவர்கள் சுதாரித்துக் கொண்ட தால், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!