மதுரை அரசு மருத்துவமனையில் கறுப்பு பூஞ்சை நோய்க்கு 60 பேர் அனுமதி!

மதுரை அரசு மருத்துவமனையில் கறுப்பு பூஞ்சை நோய்க்கு 60 பேர் அனுமதி!
X
மதுரை அரசு மருத்துவமனையில் 60 பேர் கறுப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 16 பேருக்கு தற்போது வரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் மூலம் அவர்களில் தற்போது ஐந்து பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை அறிகுறியுடன், சிகிச்சை பெற்று வரும் 60 பேரில் 55 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். மேலும், அவர்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தட்டுப்பாடின்றி அவர்களுக்கு தேவையான மருந்துகள் அனைத்தும் மருத்துவமனையில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் நமக்கு தகவல் தெரிவித்தனர்.

மீதமுள்ள 44 பேருக்கு அறுவை சிகிச்சை செய்த பின்பே அவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதி செய்யப்படும் என்று கூறுகின்றனர். தனியார் கண் மருத்துவமனையில் புதிதாக 8 பேர் அறிகுறியுடன் உள்ளனர். இதில், இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்பு , 10 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!