மதுரை அருகே பாசனக் கால்வாயை தூர்வாரக் கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு

மதுரை அருகே பாசனக் கால்வாயை தூர்வாரக் கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு
X

மதுரை அருகே பாசன காவல்வாய் தூர் வாரப்பட வேண்டும் என கேட்டு விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

மதுரை அருகே பாசனக் கால்வாயை தூர்வாரக் கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மதுரை வலையங்குளம் பகுதி விவசாயிகள், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகரிடம், கண்மாயை தூர்வாரக் கோரி மனு அளித்தனர்.

அந்த மனுவில், விவசாயிகள் கூறியிருப்பதாவ

ஐவகை பிரிவு நிர்வாகிகள், நீர்பாசன வாய்க்கால் விளாச்சேரி பிரிவிலிருந்து- திருப்பரங்குன்றம் பகுதி கண் மாய்க்கும் நிலையூர் கம்பிக்குடி நீட்டிப்புக் கால்வாய்க்கு பாத்தியப்பட்ட கண்மாய்களுக்கும் தண்ணீர் வரும் வாய்க்கால் விளாச்சேரி முதல் பெருங்குடி கண்மாய் வரை தூர்வாரப்படாமல் இருக்கின்றன.

மேற்படி, வாய்க்காலை, தூர்வாரி தண்ணீர் தங்குதடையின்றி மேற்படி தண்ணீர் கிடைப்பதற்கு உதவி செய்ய கோரியிருந்தனர்.பெருங்குடி முதல், விளாச்சேரி வரை, தொடர்ந்து தூர்வாரப்படாததால்,பாசனம் பாதிக்கப்படுவதாகவும், மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!