நல்லாசிரியர் விருதுத் தொகையை அரசிடமே திருப்பி வழங்கி அசத்திய ஆசிரியர்கள்...!

மதுரையில் ஆசிரியர் தின விழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற 9 ஆசிரியர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட விருது தொகையை கொரோனா நிவாரண நிதி, கீழடி அகழாய்வு செலவின நிதிக்கு வழங்கினர்.
தமிழக அரசின் சிறந்த நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா, மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக கூட்ட அரங்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தலைமையில் நடைபெற்றது. இதில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த 13 பேருக்கு நல்லாசிரியர்களுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.
நிகழ்வில், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. மு.பூமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர். மதுரை லெட்சுமிபுரம் டி.வி.எஸ் ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி, மதுரை முக்குலத்தோர் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை பரமேஸ்வரி உள்ளிட்ட 5 ஆசிரியைகள், மதுரை தபால் தந்தி நகர் புனித மைக்கேல் மேல்நிலை பள்ளி முதல்வர் மதிவதனன் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் மொத்தம் 9 பேருக்கு விருது மற்றும் ரொக்கம் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. 9 ஆசிரியர்களும் தங்களுக்குக் கிடைத்த ரூ. 90 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர். மதுரை பொய்கை கரைப்பட்டி அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அருள்ராஜ் தனது விருது தொகை. ௹.10 ஆயிரத்தை, கீழடி அகழ்வாராய்ச்சி செலவினங்களுக்காக ,மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. மு.பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோரிடம் வழங்கினர்.
மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் கூறியதாவது: மாநிலத்துக்கே இது ஒரு முன் மாதிரியாக, மதுரை மாவட்டத்தை சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற 13 ஆசிரியர்களில் 9 பேர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி அளித்துள்ள செயல் மிகவும் பெருமைக்குரியது என்றார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ச.வெங்கடேசன் கூறியதாவது:நல்லாசிரியர் விருது பெறுகின்ற 13 பேருக்கும் அன்பான வாழ்த்துகள். ஆசிரியர்கள் என்றைக்குமே முன்னுதாரணமாக இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக, விருது தொகையான ரூ. 10 ஆயிரத்தை 9 ஆசிரியர்கள், முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளர் . இந்த முன்மாதிரியான செயலுக்கு பாராட்டுகள். இந்தியாவிலேயே அகழாய்வு பணிக்கு, தொல்லியல் துறைக்கு, இத்தனை கோடி ஒதுக்கி இருக்கிற மாநில அரசாக தமிழக அரசு இருக்கிறது. நேற்றைய தினம் சட்டப்பேரவையில், தொல்லியல் துறை சார்ந்த செயல்பாடு, தமிழகத்தின் வளர்ச்சி, பண்பாட்டுக்கு, புதிய உத்வேகத்தை வழங்கியிருக்கிறது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu