பணம் வாங்கியவர் திருப்பித் தராததால் மூதாட்டி தற்கொலை

பணம் வாங்கியவர்   திருப்பித் தராததால் மூதாட்டி தற்கொலை
X

பைல் படம்

பணத்தை வாங்கி ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூதாட்டி, முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் அளித்திருந்தார்

பணம் வாங்கியவர் திருப்பி தராமல் ஏமாற்றியதால் மனமுடைந்த மூதாட்டி தற்கொலை

மதுரை திருப்பாலை அன்புநகர் பகுதியை சேர்ந்த சின்னூர் அம்மாள் என்ற மூதாட்டியிடம், பணத்தை வாங்கிவிட்டு திருப்பி தராத நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மூதாட்டி, முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் அளித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, திருப்பாலை காவல்நிலைய போலீஸார் விசாரணை முடித்த பின்னரும், பணம் திரும்ப கிடைக்காத விரக்தியில், மூதாட்டி இருந்தாராம். இதையடுத்து, மூதாட்டி சின்னூர் அம்மாள் மற்றும் அவரது மகன் திருநாவுக்கரசு ஆகியோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதில், மூதாட்டி உயிரிழந்த நிலையில், மகன் கவலைக்கிடமான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!