மதுரையில் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் அமைப்பின் மண்டல மாநாடு

மதுரையில் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் அமைப்பின் மண்டல மாநாடு
X

சாதனையாளர்களுக்கான விருது கே.புதூர் ஜெயமீனாட்சி இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குனர் பாண்டீஸ்வரி முத்துகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது

மதுரையில் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் அமைப்பின் மண்டல மாநாடு நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் அமைப்பு சாரபில் மண்டல மாநாடு, மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில், வணிகர்களின் சங்கமம் அமைப்பின் மண்டல நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினர். மேலும், இந் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு வணிகர்களின் சங்கமம் அமைப்பை வாழ்த்தி சிறப்புரை யாற்றினார்.

இந் நிகழ்ச்சி அமைப்பின் நிறுவனத் தலைவர் என்.செந்தில்குமார் தலைமையில் நடந்தது. மேலும், விழாவில் சிறந்த சாதனையாளர்களுக்கான விருது கே.புதூர் ஜெயமீனாட்சி இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குனர் பாண்டீஸ்வரி முத்துகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அமைப்பின் மாநில துணைதலைவர் சுரேஷ், மாநில பொதுசெயலாளர் மோகன் குமார், இணைசெயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் கைலாசம், மண்டல த் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார்,

செயலாளர் அழகுராஜ் , ஐடி பிரிவு செயலாளர் கார்த்திகேயன், மகளிரணி செயலாளர் கேத்ரினா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், பல்வேறு துறையில் சாதித்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு விருது வழங்கல் மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம், வணிகன் இமார்ட் துவக்கம் போன்றவை நடைபெற்றது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!