மதுரையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்

மதுரையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்
X
மொத்தம் 2231 பயனாளிகளுக்கு ரூ.6,50,7000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

மதுரை மாவட்டம், தொழிலாளர் நலத்துறை தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சி தலைவர் வளாக கூட்டரங்கில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்:

மதுரை மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வளாக கூட்டரங்கில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று (30.07.2021) வழங்கினார்.

தொழிலாளர் துறை சார்பில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 188 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை ரூ. 3,87,000 மதிப்பிலும், 6 பயனாளிகளுக்கு கண் கண்ணாடி ரூ.3000 மதிப்பிலும், 170, பயனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.42,50,000 மதிப்பிலும், 1867 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ.18,67,000 மதிப்பிலும், என மொத்தம் 2231 பயனாளிகளுக்கு ரூ.6,50,7000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளைஅமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.செந்தில்குமாரி, தொழிலாளர் இணை ஆணையர் பெ.சுப்பிரமணியன், கூடுதல் தொழிலாளர் ஆணையர் தி.குமரன், தொழிலாளர் உதவி ஆணையர்(ச.பா.தி) சீ.மைவிழிச்செல்வி மற்றும் பலர் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!