மதுரை: மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி அலுவலகங்களில் நல்லிணக்க உறுதி ஏற்பு

மதுரை: மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி அலுவலகங்களில் நல்லிணக்க உறுதி ஏற்பு
X

மதுரை மாநகராட்சியில் ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதி எடுத்துக் கொள்ளப்பட்டது:

அனைத்து மண்டல அலுவலகங்கள், மைய அலுவலகத்திலும் முதல்நிலை அலுவலர்கள் முன்னிலையில், அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மதுரை மாநகராட்சியில் ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது:

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தலைமையில் அனைத்து பணியாளர்களும் எடுத்துக் கொண்டனர். முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 20ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் , நல்லிணக்க நாள் உறுதி மொழியினை, ஆணையாளர் மரு.கா.ப. கார்த்திகேயன், தலைமையில், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதனைப் போன்று அனைத்து மண்டல அலுவலகங்கள், மைய அலுவலகத்திலும் முதல்நிலை அலுவலர்கள் முன்னிலையில், அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், உதவி செயற்பொறியாளர்முருகேச பாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி முன்னிலையில், அரசு அலுவலர்கள் நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!