மதுரை மாநகராட்சியில் புதிய ஆணையாளர்
மாநகராட்சி ஆணையாளராக கார்த்திக்கேயன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் மிகப்பெரிய மாநகராட்சியான மதுரையில், வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப், அம்ருத் திட்டங்களை செம்மைப்படுத்தி மேம்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை பழமையும், தொன்மையும் மாறாமல் நவீன மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அதிகாரிகளின் ஆலோசனைகள் மற்றும் பொதுமக்கள் கருத்துக்களை பெற்று மதுரையை நவீனமயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுரையை நவீனமயமாக்க திட்டங்கள் வகுக்க அடிப்படை பணிகள் தொடங்கப்படும். மதுரையில், கொரானா பரவல் குறைந்துள்ளது. கொரானா தடுப்பு பணிகள் நல்ல முறையில் சென்று கொண்டுள்ளது.அது தொடர்ந்து செய்யப்படும் எனக், கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu