மதுரையில் 24 மணி நேர சமுதாய மையம்: அமைச்சர் தொடங்கி வைப்பு
மதுரை மாநகராட்சி அன்சாரி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 24 மணி நேர சமுதாய நல மையத்தை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்:
மதுரை மாநகராட்சி அன்சாரி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 24 மணி நேர சமுதாய நல மையத்தை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்:
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 அலுவலக வளாகத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப் பட்டுள்ள 24 மணி நேர சமுதாய நல மையத்தை, மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர்கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திறந்து வைத்து பேசியதாவது: தமிழக முதல்வர் உத்தரவின்படி, பல்வேறு திட்டங்கள் மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, மதுரை மாநகராட்சி அன்சாரிநகர் நகர்ப்புற சமுதாய சுகாதார மையம் கட்டுவதற்கு தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் மூலம் புதிய கட்டிடம் கட்டுவதற்கென ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் முதல் தவணையாக ரூ.15லட்சம் மற்றும் இரண்டாவது தவணையாக ரூ.37.50 லட்சம் என மொத்தம் ரூ.52.50 நிதி ஒதுக்கீடு பெறப் பட்டுள்ளது.
இந்நிதியின் கீழ், இம்மருத்துவமனையில் படுக்கை வசதி, நோயாளிகள் அமருவதற்கு காத்திருப்பு அறை, முன்பதிவு கூடம், ஸ்கேனிங் சென்டர். ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கு வசதியாக சாய்வு தளம், மருந்து கொடுக்கும் இடம், உள் நோயாளிகள் அறை, மருத்துவர் அறை, உபகரணங்கள் வைக்கும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் தனியார் மருத்துவமனைக்கு இணையாக இம்மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது.
மேலும் ,அன்சாரி நகர் நகர்ப்புற சமுதாய சுகாதார மையத்திற்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 55849 மக்கள் பயன்பெறும் வகையில் 24 மணி நேரமும் இந்த மருத்துவமனை செயல்படும். நாள் ஒன்றுக்கு சராசரியாக 170 வெளி நோயாளிகளும், 5 உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்திடமிருந்து அன்சாரிநகர் நகர்ப்புற சமுதாய மையத்திற்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் ரூ.16.44 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு உயர்தர அறுவை சிகிச்சை உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது. இம்மருத்துவமனை இப்பகுதியை சார்ந்த அடித்தட்டு மக்களுக்கு உதவும் வகையிலும் மாநகராட்சியிலேயே சிறந்த மருத்துவமனையாக இம்மருத்துவமனை செயல்படுத்தப்படும் என்றார் அமைச்சர் பழனிவேல்தியாகராஜன்.
இதில், நகர்நல அலுவலர் மரு.ராஜா, உதவி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர்அலெக்ஸ்சாண்டர், சுகாதார அலுவலர் விஜய குமார், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu