மதுரையில் சிலம்ப போட்டிகள்: மாணவ, மாணவியர்களுக்கு பரிசு

மதுரையில் சிலம்ப போட்டிகள்: மாணவ, மாணவியர்களுக்கு பரிசு
X

மதுரையில் நடைபெற்ற சிலம்பாட்டப் போட்டிகளில் பரிசு வென்ற மாணவ, மாணவிகள்

சிறப்பாக சிலம்பம் சுற்றி விளையாடிய மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்

மதுரையில் சிலம்ப போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் இந்தியன் அசோசியேசன், இன்டர்நேஷனல் மாடர்ன் மார்ஷியல் ஆர்ட்ஸ், தேவராட்டம் சிலம்பம், இந்தியன் சிலம்பம் பள்ளி ஆகியவை இணைந்து சிலம்ப போட்டியை நடத்தினர். மதுரை கே.கே. நகரில் உள்ள ஏ. ஆர். பார்க்கில் சிலம்பாட்டப் போட்டிகள் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக மதுரை மாநகர் தல்லாகுளம் உதவி ஆணையாளர் சூரக் குமார் மற்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர், செயலாளர் தவமணி கிறிஸ்டோபர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக சிலம்பம் சுற்றி விளையாடிய மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். உடன் , சிலம்ப ஆசிரியர்கள் எஸ்.எம்.மணி, முத்துமாரி, ஷிஜோசரவணன், ஷேக் அப்துல்லா ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story
smart agriculture iot ai