மதுரை பைபாஸ் பகுதியில் வீணாகும் குடிநீர்..!

மதுரை பைபாஸ் பகுதியில் வீணாகும் குடிநீர்..!
X
24 மணி நேரமும் தங்கு தடையின்றி பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் செல்லும் அவலம்..! கண்டு கொள்ளாத அதிகாரிகள்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு பைபாஸ் சாலை எச்டிஎஃப்சி வங்கி முன்பும் அங்கிருந்து சுமார் 200 அடி தள்ளி 24 மணி நேரமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் தங்குதடையின்றி சாலையில் வீணாக செல்கிறது. பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .

சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் ஏன் அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வில்லை, கண்டும் காணாமல் இருக்கிறார்கள் குடிநீர் வீணாக ஏன் அவர் கண்களுக்கு தெரியவில்லையா என கேள்வி. இதுபோன்ற அஜாக்கிரதையாக செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது . உடனடியாக, குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் மாநகராட்சி நிர்வாகம் அதை செய்வார்களா எதிர்பார்ப்புடன் சமூக ஆர்வலரும் பொதுமக்களும்.



Tags

Next Story
ai in future agriculture