மதுரையில் தனியார் ஆலையில் தொழிலாளி மரணம்

மதுரையில் தனியார் ஆலையில் தொழிலாளி மரணம்
X

தொழிற்சாலை விபத்து

மதுரையில் தனியார் ஆலையில் இயந்திர உதிரி பாகம் தவறி விழுந்து தொழிலாளி மரணம்

மதுரை காளவாசல் அருகே இயங்கும் தனியார் தொழிற்சாலையில் , மதுரை வில்லாபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சோனை முத்து மகன் வினித் பாரதி, வேலை பார்த்து வந்தார்.

இவர் இரவு நேர பணியில் இருந்தபோது இயந்திரங்கள் கருவிகள் வைத்திருக்கும் அறைக்குச் சென்றார். அப்போது, இரும்புக் கருவி ஒன்று தவறி வினித் பாரதி நெஞ்சில் விழுந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து, அவருடைய தந்தை சோனைமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில், மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story