மதுரையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் - மாநகராட்சி ஆணையர்
பைல் படம்.
இதுகுறித்து ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்கள், தெருவோர வியாபாரிகள், ஹோட்டல்கள், தேநீர், அடுமனை மற்றும் நகைக்கடை மற்றும் ஜவுளிக் கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தவறாமல் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
மதுரை மாநகராட்சியின் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கீழசித்திரை வீதி , தெற்கு சித்திரை வீதி என மதுரை மாநகராட்சி எல்லைக்குள் கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . முக்கியமாக மதுரை மருத்துவக் கல்லூரியில் தடுப்பூசி முகாம் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
எனவே, அனைத்து நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி போடப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஆய்வு செய்யும் நேரத்தில் தடுப்பூசி போடாதது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், 100 நபர்களுக்கு மேல் தடுப்பூசி தேவைப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், தொண்டு நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியோர் மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை 8428425000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu