மதுரை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கல்

மதுரை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கல்
X

துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மதுரை மாநகராட்சி மற்றும் தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். கூட்டமைப்பின் மாநில துணை அமைப்பாளர் எஸ் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொருளாளர் விநாயகமூர்த்தி, மாநில மகளிரணி தலைவர் நாகம்மாள், மாநில துணைத் தலைவர் பீட்டர் ஞானசேகரன், மாநில துணைப் பொதுச் செயலர் குமரேசன், மாநில துணைப் பொதுச் செயலர் ராமன், மாநில துணைத் தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!