மதுரை மாநகராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆணையாளர் ஆய்வு

மதுரை மாநகராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள்:  ஆணையாளர் ஆய்வு
X

மதுரை மாநகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் ஆய்வு செயதார்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் ஆய்வு.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1க்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 வார்டு எண்.20 வெள்ளைக்கண்ணு தியேட்டர் சாலையில் ரூ.18.44 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையினை பார்வையிட்டு சாலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் ,வார்டு எண்.16 அழகன்தோப்பில் மத்திய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, வார்டு எண்.21 பெத்தானியாபுரம் பாத்திமா நகரில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரூ.8.05 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள மராமத்து பணிகளை ஆய்வு மேற்கொண்டு பள்ளி வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்குமாறு தலைமை ஆசிரியரிடம் கூறினார்.

மேலும், பாத்திமா நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு பரிசோதனைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளித்து அனுப்புமாறு மருத்துவரிடம் கூறினார். இந்த ஆய்வின் போது, உதவி செயற்பொறியாளர்கள் அலெக்ஸ்சாண்டர், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப் பொறியாளர் பாலமுருகன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future