பழனிச்சாமி ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை-ஸ்டாலின்

பழனிச்சாமி ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை-ஸ்டாலின்
X

பழனிச்சாமி ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை என மதுரையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

இன்று (17-03-2021), திமுக தலைவர் ஸ்டாலின் , தேர்தல் பரப்புரை பயணத்தின் போது, மதுரை - பழங்காநத்தத்தில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். அவர் பேசும் போது,மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் சின்னம்மாள் ஒரு எளிமையான வேட்பாளர். அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர், அவரை கோமாளி மந்திரி என்று சொல்வதா, காமெடி மந்திரி என்று சொல்வதா? – தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜூ, தான் நிற்கிறார். தேர்தலுக்காக மட்டும் வருகிறவன் இந்த ஸ்டாலின் அல்ல, எப்பொழுதும் - எந்த நேரத்திலும் - எந்த சூழ்நிலையிலும் வருகிறவன். இப்போது நான் முதலமைச்சர் வேட்பாளராக வந்திருக்கிறேன்.

தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவதும் பா.ஜ.க. வெற்றி பெறுவதும் ஒன்றுதான். பா.ஜ.க. உறுப்பினராக வர வேண்டும் என்ற அவசியம் இல்லை; அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும் அவர்கள் பா.ஜ.க. உறுப்பினர் தான். தமிழ்நாட்டில் இப்போது பா.ஜ.க.விற்கு ஒரு உறுப்பினர் கூட இல்லாமல், சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் இன்றைக்கு அ.தி.மு.க.வின் ஆட்சி நடைபெற்றாலும், தமிழ்நாட்டில் இப்போது பா.ஜ.க. ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது.அதிமுக அரசால் காவிரி உரிமையை நிலைநாட்ட முடியவில்லை. நீட் தேர்வை தடுக்க முடியவில்லை. ஜி.எஸ்.டி. வரியை குறைக்க முடியவில்லை. தமிழ்நாட்டிற்கு வந்து சேர வேண்டிய நிதியை முறையாக பெற முடியவில்லை.உள்ளாட்சித் தேர்தலை முறையாக இந்த ஆட்சி நடத்தவில்லை. அதிமுக, பழனிச்சாமி ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை.

மின் கட்டண உயர்வு , பால் விலை உயர்வு , பெட்ரோல் விலை, டீசல் விலை உயர்வு, இதனால் நம்முடைய வீட்டுப் பெண்கள் – தாய்மார்கள் கண்ணீர் சிந்தும் வகையில் விலைவாசி விஷம் போல் ஏறி இருக்கிறது. இவ்வாறு பத்தாண்டு காலமாக பாழாகிப்போன இந்த தமிழகத்தை மீட்க வேண்டும் என்பதற்காகத்தான் கடந்த 7ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் நான் 7 உறுதிமொழிகளை அறிவித்தேன். எனவே தமிழகத்தை மீட்டெடுக்க திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!