நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்
X

கலை பண்பாட்டு துறையின் கீழ், நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்த 17 கலைஞர்களுக்கு ரூ.98,500-க்கான காசோலைகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

தமிழக அரசின் கலைபண்பாட்டுத் துறையின் கீழ் நாட்டுப்புறக் கலைஞர்கள் 17 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மதுரை மாவட்டம் கலைபண்பாட்டு துறையின் கீழ், நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்த 17 கலைஞர்களுக்கு ரூ.98,500-க்கான நிதியுதவிக் காசோலைகளை பயனாளிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், வழங்கினார்.

தமிழக அரசின் கலைபண்பாட்டுத் துறையின் கீழ் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் செயல்படுகிறது. இதில், பதிவு செய்து உறுப்பினராக உள்ள கலைஞர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கலை பண்பாட்டுத் துறையின் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வேண்டி, விண்ணப்பித்த 44 கலைஞர்களுக்கு கல்வி நிதயுதவி, மூக்குக் கண்ணாடி, ஈமச்சடங்கு, இயற்கை மரணம் ஆகியவற்றிற்கான நிதியுதவி ரூ.5,18,000-யை கலை பண்பாட்டுத் துறையால், வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வேண்டி, விண்ணப்பித்த 17 கலைஞர்களுக்கு ரூ.98,500-க்கான நிதியுதவிக் காசோலைகளை, பயனாளிகளுக்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!