மதுரை சாலை விபத்தில் விசாரணைக்கு சென்ற போக்குவரத்து தலைமைக் காவலர் சாவு

மதுரை சாலை விபத்தில் விசாரணைக்கு சென்ற போக்குவரத்து தலைமைக் காவலர் சாவு
X

சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து தலைமைக்காவலர் ராஜசேகரன்.

மதுரை சாலை விபத்தில் விசாரணைக்கு சென்ற போக்குவரத்து தலைமைக் காவலர் உயிரிழந்தார்.

மதுரை திருமங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (42) போக்குவரத்து புலனாய்வுத்துறை தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், பெருங்குடி ரிங் ரோடு அருகே உள்ள சின்ன உடைப்பு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்து குறித்து விசாரணை நடத்த டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது, மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலாநகர் சந்திப்பில் நிலை தடுமாறி சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்தார்.

தொடர்ந்து, அவரை மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவனியாபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!