மதுரை ஆதீனமாக பதவியேற்றுவிட்டேன்: நித்தியானந்தா முகநூல் பதிவால் பரபரப்பு

மதுரை ஆதீனமாக பதவியேற்றுவிட்டேன்: நித்தியானந்தா முகநூல் பதிவால் பரபரப்பு
X

நித்தியானந்தா 

'நான்தான் மதுரை ஆதீனம்' என்று நித்தியானந்தா முகநூலில் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை:

மதுரை ஆதினத்தின் 292வது ஆதினம் அருணகிரிநாதர் மறைந்த நிலையில், 293வது பீடாதிபதியாக தான் பதவியேற்றுகொண்டுள்ளதாகவும், இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும், இந்தியாவில் இருந்து தப்பியோடிய நித்தியானந்தா, முகநூலில் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு ஏற்கனவே அருணகிரிநாதரால் தான் இளைய ஆதினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


தான் ஆதினமாக பொறுப்பேற்ற நிலையில், கைலாசா நாட்டு ஆதின மட செயல்பாடுகளின் வழிகாட்டுதல் குறித்தும் 8-பக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மதுரை ஆதினத்தின் 292வது சன்னிதானமான அருணகிரிநாதர் மறைவை அடுத்து ,கைலாசா நாட்டில் துக்கம் அனுசரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

293-வது மதுரை ஆதினம் என கூறி தனக்கான பெயரை 293-வது ஜெகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் எனவும் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ai in future agriculture