மதுரையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி: அமைச்சர் ஆய்வு

மதுரை மாநகராட்சி பகுதியில் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணி" நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர்பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், துவக்கி வைத்து பார்வையிட்டார்:
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 மேலப்பொன்னகரம் மெயின் சாலையில் உள்ள சிந்தாமணி வாய்க்கால் தூர்வாரும் பணியினை, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன், ஆகியோர் முன்னிலையில்,நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
தமிழகம் எதிர்நோக்கி உள்ள வடகிழக்கு பருவமழையினால், நகரப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகும் வாய்ப்பு உள்ளதாலும், அதிகப்படியாக தேக்கமாகும் மழைநீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலையும் உள்ளது.
மேலும், மழைநீர் சாக்கடையுடன் கலந்து தேங்குவதால், இதர தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. ஆகவே, எதிர்வரும் பருவமழையினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திட ஏதுவாக வரும் 20.09.2021 முதல் 25.09.2021 வரை "மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி" மேற்கொள்ள தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள மழைநீர் வடிகால், வாய்க்கால் முழுமையாக தூர்வாரி துய்மைப்படுத்த திட்டமிடப்பட்டு மண்டலம் எண்.1 மேலப்பொன்னகரம் மெயின் சாலை பகுதியில் உள்ள சிந்தாமணி வாய்க்காலில் தூர்வாரும் பணியினை,
நிதி அமைச்சர் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த தூர்வரும் பணியின்போது, மழைநீர் வடிகால்கள் அனைத்திலும் இயந்திரங்களை பயன்படுத்தியும், சிறிய மழைநீர் வடிகால்களில் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு மணல், குப்பைகளை அகற்றப்பட உள்ளது. தேவையான பணியாளர்களை கொண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தியும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மழைநீர் வடிகால்கள், வாய்க்கால்களில் தேங்கியுள்ள மணல்கள், குப்பைகள், செடி கொடிகள் மற்றும் புதர்களை அகற்றி தூர்வரும் பணிகள் முடிக்கப்பட்ட பிறகு கொசு மருந்து தெளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாய்க்கால்களில் டெங்கு உற்பத்தி ஆகவதை தடுத்திடும் வகையில் ஆயில்பால் தெளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து வாய்க்கால்கள், மழைநீர் வடிகால்கள் தூர்வாரி மழைக்காலங்களில் மழைநீர் சீராக தங்குதடையின்றி செல்வதற்கு ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாலைகளில், தேங்கும் மழைநீரினை அருகில் மழைநீர்; வடிகால்களில் சேருமாறு கட்டமைப்பை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட பொறியாளர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மதுரை மாநகராட்சி பகுதிகளில் , உள்ள அனைத்து வாய்க்கால்கள், மழைநீர் வடிகால்கள் இன்று தூர்வாரப்பட்டது. இப் பணியில் 16 ஜே.சி.பி. இயந்திரங்கள், 32 டிராக்டர்கள் உட்பட சுமார் 150 தூய்மைப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu