மதுரையில் மறைந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் அரசு நிதியுதவி

மதுரையில் மறைந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் அரசு நிதியுதவி
X
மறைந்த பத்திரிகையாளர் நம்பிராஜன் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் ரூ. 10 லட்சம் நிதியூதவி.

கொரோனாவில் இறந்த பத்திரிகையாளருக்கு நம்பிராஜன் குடும்பத்தாருக்கு அரசு நிதியுதவி வழங்கியது.

கொரோனாவில் இறந்த பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணத்தை முதல்வர் அறிவித்திருந்தார். இதன்படி ,மதுரை மாவட்டத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் நம்பிராஜன்,மகள் சுகந்தி, மருமகன் ராமு ஆகியோருக்கு, இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், ரூ 10 லட்சத்தை முதல்வர் வழங்கினார்.

உடனடியாக நிதியுதவி வழங்கிய முதல்வருக்கு, மதுரை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் அனைவரின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் . இந்த நிதியை விரைந்து பெற்றுத்தர உதவியாக இருந்த அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் , மதுரை பி.ஆர்.ஓ. நவீன் பாண்டியன், உதவி பி.ஆர்.ஓ .வினோத் மற்றும் அலுவலர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். என செய்தியாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Tags

Next Story
photoshop ai tool