தில்லியில் பாலியல் வன்கொடுமை செய்து பெண்காவலர் கொலை: தமுமுக ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு பதவி விலகக் கோரியும், பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் முழக்கங்கள் எழுப்பி, மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினர்
புதுதில்லியில் பெண் காவலரை கூட்டு பாலியியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் தமுமுக கட்சி சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுதில்லியில் பெண் காவலர் சபியா என்பவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. அதன்தொடர்ச்சியாக, மதுரை தெற்கு வாசல் பகுதியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக, மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக, நிர்வாகி சீனி அகமது தலைமையில நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு பதவி விலகக் கோரியும், பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் முழக்கங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் முகமதுகெளஸ் மற்றும் பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu