மதுரை மீனாட்சியம்மன் கோவில் முக்குறுனி விநாயகருக்கு ராட்சத கொழுக்கட்டை

மதுரை மீனாட்சியம்மன் கோவில் முக்குறுனி விநாயகருக்கு ராட்சத கொழுக்கட்டை
X

மதுரையில் முக்குறுனி விநாயகருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தியையொட்டி ராட்சத கொழுக்கட்டை முக்குறுனி விநாயகருக்கு படைக்கப்பட்டது.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை 18 படி அரிசியில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை முக்குறுனி விநாயகருக்கு படைக்கப்பட்டது.

முன்னதாக, பக்தர்கள் இன்றி, முக்குறுனி விநாயகருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அபிஷேக, அலங்காரத்தை சிவாச்சாரியார்கள் செய்தனர்.

இதையடுத்து, 18 படி அரிசியில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டையை, கோவில் பணியாளர்கள் சுமந்து வந்து விநாயகருக்கு படைத்தனர். ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி விழாவானது, வெகு சிறப்பாக கொண்டாடப்படும். கொரோனா காலம், என்பதால் பக்தர்கள் இன்றி நடைபெற்ற விழாவாகும்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!