லாரியில் ரேசன் அரிசி மூட்டையை கடத்தி வந்தவர் கைது

லாரியில் ரேசன் அரிசி மூட்டையை கடத்தி வந்தவர் கைது
X
சிந்தாமணி பகுதியில் 18 டன் எடை கொண்ட 300 முட்டை ரேஷன், நெல் மற்றும் அரிசியை லாரி கடத்தி வந்த ஒருவரைக் கைது:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, சிந்தாமணி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில், 300 மூட்டைகளில் 18 டன் எடைகொண்ட ரேஷன் அரிசி மற்றும் நெல் மூடைகளை விருதுநகரிலிருந்து மதுரைக்கு சட்டவிரோதமாக கடத்தி வந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, அரிசி கடத்தி வந்த லாரி ஓட்டுநர் சண்முக சுந்தரத்தை கைது செய்த குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!