பொதுத்துறையை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு: தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பொதுத்துறையை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு: தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X
ரயில்வே, பெட்ரோலிய நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர்

பொதுத் துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை தெற்குவாசல் பகுதியில், அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குவதை கண்டித்து, தொழிலாளர்களின் பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 50-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், தொழிலாளருக்கு விரோதமான சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறவும், வேளாண் சட்டத்தை திரும்பப் பெறவும், தனியார் மயமாக்கும் மின்சாரச் சட்டம் 2020 கைவிடக் கோரியும், ரயில்வே, இன்சூரன்ஸ், வங்கிகள், அரசு போக்குவரத்து, பாதுகாப்பு துறை, விமான போக்குவரத்து, நிலக்கரி சுரங்கம், பெட்ரோலிய நிறுவனங்கள் போன்ற அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கைவிட கோரியும், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏழு தொழிற்சங்க அமைப்புகள் கலந்து கொண்டன.

Tags

Next Story