மதுரை வைகை ஆற்றில் தடையை மீறி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த மக்கள்

மதுரை  வைகை ஆற்றில்  தடையை மீறி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த  மக்கள்
X
மதுரை கோரிப்பாளையம் வைகை ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

ஆடி அமாவாசையையொட்டி மதுரை வைகை ஆற்றில் தடையை மீறி முன்னோர்களுக்கு , தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்து சமயத்தில் அமாவாசை என்றாலே புனிதமான நாளாக கருதப்படுகிறது. அதிலும் ஆடி அமாவாசை சிறப்பானதாக, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது.அமாவாசையில் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகியவை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்கு தன் வம்சம், தலைமுறை எப்படி இருக்கிறது என பார்க்க வருவதாக கூறப்படுகிறது. மகாளய அமாவாசை அன்று பூலோகத்தை பித்ருக்கள் வந்தடைகின்றனர். தை அமாவாசை தினத்தில் மீண்டும் பிதுர் லோகத்திற்கு நம் பித்ருக்கள் கிளம்புச்செல்வதாக ஐதீகம்.

ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலையில் நீராடி, பின்னர் சிவாலயத்தில் எம்பெருமானை வழிபாடு செய்துவிட்டு, பிதிர் தர்ப்பணம் கொடுப்பது அவசியம். பிறகு அன்னதான செய்தல் ஆகியன இந்நாளில் முக்கியத்துவம் வாய்ந்த செயல்களாகும். இந்த நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்களின் ஆசீர்வாதம் பெற்றிடலாம் என்பது நமது பண்டைய காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஐதீகம்.

இந்நிலையில், ஆடிஅமாவாசை நாளில் மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தடுக்கும் நோக்கில், தமிழக அரசு நதிக்கரையில் மக்கள் கூட்டம் கூடக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், மதுரை கோரிப்பாளையம் வைகை ஆற்றில் திரளான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மேலும், மதுரை நகரில் உள்ள தனியார் ஆலயங்களில், தர்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி, முகக் கவசம் அணிந்து தர்ப்பணம் பலர் கொடுத்தனர்.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!