மதுரை மாநகராட்சி பள்ளிகளில், ஆணையாளர் ஆய்வு

மதுரை மாநகராட்சி பள்ளிகளில், ஆணையாளர் ஆய்வு
X

மதுரை மாநகராட்சி ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் ப. கார்த்திகேயன்

பள்ளிகளில் அரசின் விதிகள் கடைபிடிக்கப்படுவது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, ஈ.வெ.ரா.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆணையர் கா.ப.கார்த்திகேயன் ஆய்வு செய்தார்

தமிழக அரசின் உத்தரவின் கீழ், பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 9 உயர்நிலை பள்ளிகள், 15 மேல்நிலைப்பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிருமி நாசினி தெளித்தல், முகக்கவசம், தனிநபர் இடைவெளி, கை கழுவும் வசதிகள் ஏற்படுத்துதல், வெப்பமானி பரிசோதனை செய்தல் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளில் வளாகங்கள் சுத்தம் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி , ஈ.வெ.ரா. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆணையர், ஆய்வு மேற்கொண்டு பள்ளிகளில் வெகுநாட்கள் கழித்து வருகை புரிந்துள்ள மாணவிகளிடம், புத்துணர்வு குறித்தும், முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளி கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் கேட்டறிந்தார். தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் புத்தாக்கப் பயிற்சி, உடற்பயிற்சிகள் அளிக்குமாறும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். மதுரை மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் சராசரியாக 5414 மாணவ, மாணவிகள் வருகை தந்தனர்.

இந்த ஆய்வின்போது, கல்வி அலுவலர் பொ.விஜயா, மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்