மதுரை ஆதீனம் முச்சுத் திணறல்: அப்போலோவில் அனுமதி -நலம்பெற பக்தர்கள் பிரார்த்தனை
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் (77) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் தலைவர் ஆதீனம் பீடாதிபதி என அழைக்கப்படுகிறார். மதுரையில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. மதுரை ஆதினத்திற்கு இன்று வரை 292 பேர் பீடாதிபதியாக இருந்துள்ளனர். 292வது பீடாதிபதியாக அருணகிரிநாதர் பொறுப்பில் உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu